டில்லி

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் மர்ம மனிதர் துப்பாக்கியால் சுட்டதால் கடும் பதட்டம் நிலவுகிறது.

டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள்  குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள்  பதிவேடு உள்ளிட்டவைகளுக்க்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அந்த பல்கலைக்கழக மாணவர்கள் ராஜ்காட் வரை பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அப்போது திடீரென ஒருவர் பேரணியில் முன் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.  அவர் மாணவர்களைப் பார்த்து “இதோ உங்கள் சுதந்திரம்,  நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்,  இந்துஸ்தான ஜிந்தாபாத்: எனக் குரல் எழுப்பியபடி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இந்த சம்பவம் மக்களிடையே கடும் பீதியை உண்டாக்கி உள்ளது.

இந்த சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டு பல இணைய தள பக்கங்களில் உலவி வருகிறது.  ஒரு கருப்பு ஜாக்கெட் அணிந்த ஒரு மனிதர் ஒற்றைக் குழல் துப்பாக்கியால் சுடும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.  துப்பாக்கியால் சுடப்பட்டவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழகத்தின் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவு மாணவர் ஷதாப் நஜார் காயமடைந்துள்ளார்.   அவர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   துப்பாக்கியால் சுட்டவர் முகமது லுக்மான் என்னும் 50 வயது உள்ளவர் எனவும் அவர் ஷ்கின் பாக் பகுதியில் வசித்து வருவதாகவும்  அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.