உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரனை வீழ்த்தி இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்.
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரனை எதிர்கொண்டார் குகேஷ்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 4 மணி நேரம் வரை நீடித்த நிலையில் 58வது நகர்த்தலில் குகேஷ் வெற்றிபெற்றார்.
இதன் மூலம் உலகின் இளம் வயது செஸ் சாம்பியன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
1985ம் ஆண்டு கார்போவ்-வை தனது 22 வது வயதில் தோற்கடித்த காஸ்பரோவ் இதுவரை இந்த பெருமையை பெற்றிருந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.