குஜராத் அரசு இன்று தங்களது ஆண்டு வருமானம் அடிப்படையில் அனைத்து மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவுகள் (OBC) 10 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்தது.
ஆண்டு வருமானம் Rs.6 லட்சத்திற்குள் இருந்தால் ஒதுக்கீடு கொடுக்கப்படும் என முதல்வர் ஆனந்தி பென் படேல் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
10 சதவீதம் OBC ஒதுக்கீடு வரும் 2016-2017 கல்வி ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படும் என விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
மிகவும் முன்னேறிய சாதியான படேல் சமுதாயத்தினர், சமீப காலமாக, வேலையில் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வரும் வேளியுல் குஜராத் அரசு இந்த முடிவினை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படேல் சமூகத்தினர் குஜராத் அரசின் இந்த அறிவிப்பினை புறக்கணித்துள்ளனர். இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்றும் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.