அகமதாபாத்
போலிப் பெயர்களில் 66 போலி நிறுவனங்கள் தொடங்கி குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.177 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் வடோதராவில் வசிப்பவர் எகசாஸ் அலி சையத் என்னும் 29 வயது இளைஞர். இவர் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். எகசாஸ் அலி சையத் 66 போலி நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் பல போலி பில்களை அளித்துள்ளார். அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களாக பல கற்பனை பெயர்களையும் அளித்துள்ளார். அந்த பில்களின் மூலம் தனது நிறுவனம் பொருட்களை வாங்கியதாக கணக்கு காட்டி உள்ளார்.
இவ்வாறு அவர் ரூ. 1210 கோடிக்கான பில்களை தயாரித்துள்ளார். அந்த பில்களின் மொத்த ஜிஎஸ்டி தொகை ரூ.177.64 கோடிகள் ஆகும். இந்த பில்கள் மூலம் அவர் நடத்தி வந்த நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி திருப்பு வரியாக ரூ.177.64 கோடியை திரும்பக் கோரி கணக்கு அளித்துள்ளார். இது குறித்து ஆராய்ந்ததில் அனைத்தும் போலி பில்கள் என கண்டறியப்பட்டது.
அதை ஒட்டி அவர் நிறுவனத்தில் சோதனை இட்ட போது அந்த நிறுவனங்களின் ஜிஎஸ்டி போலி ஆவணங்கள், நிறுவனங்களின் போலி உரிமையாளர்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கிடைத்துள்ளனர். இன்று கால கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிராது.