அகமதாபாத்:
குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்கு பதிவில் மாலை 4 மணி வரை 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குபதிவு இன்று நடந்தது. வாக்காளர்கள் காலை 8 மணியில் இருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்த தேர்தலில் ராஜ்கோட் (மேற்கு) தொகுதியில் போட்டியிடும் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மாண்ட்வி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சக்திசின்ஹா கோஹில் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் வரை 30.31 சதவீத வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது. மாலை 4 மணி வரை நடந்த வாக்கு பதிவில் 2.12 கோடி வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். மாலை 5 மணியுடன் வாக்கு பதிவு நிறைவடைந்தது. இறுதி நிலவரம் உடனடியாக வெளியாவில்லை.