ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் வீண் , புனே ஜயண்ட்ஸ் அணி தோல்வி – குஜராத் கடைசி பந்தில் வெற்றி
இன்று பூனாவில் நடைபெற்ற இப்ல் 2016இன் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ் அணி விளையாடினர். டாஸ் வென்ற குஜராத் புனே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
துவக்க வீரர்கள் ரஹானே மற்றும் சவ்ரவ் திவாரி களமிறங்க , திவாரி சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனார் . பின்னர் ரஹானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் விக்கெட்டுக்கு 111 ரன்களை சுமார் 11 ஓவர்களில் எடுத்தனர். ரஹானே அவுட் ஆன பின்னர் ஸ்மித்துடன் தோனி ஜோடியாக அதிரடி ஆட்டத்தின் மூலம் புனே அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 195 / 3 எடுத்தனர். ஸ்மித் 20 ஓவர் போட்டிகளில் எடுத்த முதல் சதம் இதுதான் 101 ரன்களை 54 பந்துகளில் எடுத்தார் , தோனி 30 ரன்களும் , ரஹானே 53 ரன்களும் எடுத்தனர்.

குஜராத் வெற்றி பெற 196 ரன்கள் தேவை என்ற இலக்குடன் , ட்வைன் ஸ்மித் மற்றும் மெக்கல்லம் களம் இறங்கினர் தங்களின் அதிரடி ஆட்டம் மூலம் 8 ஓவர்களில் 93 ரன்களை சேர்த்தனர் . பின்னர் ஸ்மித் , ரைனா , கார்த்திக் மற்றும் ஜேம்ஸ் பௌல்க்னர் ஆகியோர் சிறப்பாக ஆடி குஜராத் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
புனே அணியின் பௌலர்கள் இவ்வளவு அதிக ஸ்கோரை குஜராத் அணியினரை எடுக்கக் விட்டது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது என வர்ணனையாளர்கள் கூறுகின்றனர்.
புனே 20 ஓவரில் 195/3( ஸ்மித் 101 , ரஹானே 53 , தோனி 30* ) குஜராத் 196/7 20 ஓவர் ( ஸ்மித் 63 , மெக்கல்லம் 43 , ரைனா 34 , கார்த்திக் 33)
Patrikai.com official YouTube Channel