டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பலியானவர்களின் எண்ணிக்கையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பல மாநிலங்களில் பரவியிருக்கிறது.

இந் நிலையில் குஜராத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து இருக்கிறது. மற்ற மாநிலங்களை விட கொரோனா பலியில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.

பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கு பலியாகி இருக்கிறார் என்று அம்மாநில முதன்மை சுகாதார செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்தார். அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 69 ஆக உள்ளது.

குஜராத்தின் கொரோனா இறப்பு விகிதம் 8.69 சதவீதமாகும். கிராமங்களில் இந்த நோய் பரவி வருவது அதிகாரிகளுக்கு கவலையளிக்கிறது.  சமீபத்திய பாதிக்கப்பட்டவர் பவங்கரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வதற்காக கிராமப்புறங்களில் சுகாதார கணக்கெடுப்பு மற்றும் சமூக பரவலை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

தொடர்ந்து பேசிய ஜெயந்தி ரவி, உயிரிழந்தவருக்கு மனநல பிரச்சினைகள் இருந்தது. 15 நாட்களுக்கு முன்பு தனக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் 59 பேர் மருத்துவமனையில் உள்ளனர், 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர், ஆனால் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார்கள் என்றார்.

[youtube-feed feed=1]