கமதாபாத்
கமதாபாத் பொது மருத்துவமனை ஒரு இருட்டு சிறை போல் அமைந்துள்ளதக குஜராத் உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா, இரண்டாம் இடத்தில் தமிழகம் மற்றும் மூன்றாம் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளன.  குஜராத் மாநிலத்தில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்  கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கையில் குஜராத் மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது இங்கு சுமார் 830 பேர் உயிர் இழந்துள்ளனர்.
உயிர் இழந்தோரில் சுமார் 45% பேர் அகமதாபாத் நகரில் உள்ள பொது மருத்த்துவமனையில் உயிர் இழந்துள்ளன்ர்.   இந்த மருத்துவமனை அசர்வா பகுதியில் அமைந்துள்ளது. பொது மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை இலவசமாகும்.  ஆகவே இங்கு பலரும் கொரோனா சிகிச்சைக்கு வருகின்றனர்  இங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க 1200 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கபட்டுள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கயாசுதீன் ஷேக் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.  இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அலட்சியமான மற்றும் முறையற்ற சிகிச்சையால் அதிக அளவில் மரணம் ஏற்படுவதாக அவர் தனது கடிதத்தில் புகார் அளித்திருந்தார்.
குஜராத் உயர்நீதிமன்றம், “அகமதாபாத் பொது மருத்துவமனை சுகதாரமற்ற நிலையில் இயங்கி வருவதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.   பொது மருத்துவமனைகளுக்கு ஏழை மக்கள் அதிக அளவில் வருவார்கள்.   இந்த மருத்துவமனை ஒரு இருட்டு சிறை போல் அமைந்துள்ளது.  விலை மதிப்பற்ற மனித உயிர்க்ளை இது போன்ற ஒரு இடத்தில் இழக்க நேரிடுவதை அனுமதிக்க முடியாது
தொடர்ந்து இந்த மருத்துமனையில் இறப்புக்கள் அதிகரித்து வருகின்றன.  வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கலாம்.   இம்மருத்துவம்னையில் அனுமதிக்கபடுவோர் மூன்று அல்லது நான்கு நாட்களில் உயிர் இழந்து விடுகின்றன்ர்.  இது மிகவும் வருத்தம் அளிக்கிரது  இந்த மருத்துவமனைக்கு மாநில சுகாதார அமைச்சர் எத்தனை  முறை சென்றுள்ளார்  அத்துடன் அவர் அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் எத்தனை முறை கலந்தோலோசனை நடத்தி உள்ளார்?
கொரோனா நோயாளிகளுக்காக 1200 படுக்கைகள் ஒதுக்கப்பட்ட போதிலும் அவற்றை பயன்படுத்தாமல் செயற்கையாக தட்டுப்பாடுகள் உருவாக்கபட்டுள்ளது.  கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு பொது வார்டுகளில் சிகிச்சை அளிக்கபபடுவது தெரிய வந்துள்ளது.
மாநில சுகாதார அமைச்சர் ரத்திலால படேல் மருத்துவமனை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை த்யார் செய்து மாநில முதல்வர் விஜய் ரூபானி மூலம் நீதிமன்றத்துக்கு  அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.