கமதாபாத்

டந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் தீவிபத்தில் மரணம் அடைந்தோரின் வாரிசுகளுக்கு நிதி உதவி அளிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2002 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அன்று அயோத்தியாவில் ராமர் கோவிலுக்கான கர சேவையை முடித்து விட்டு ரெயிலில் பலர் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது கோத்ரா ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டு பெட்டியில் இருந்த அனைவரும் உடல் கருகி மரணம் அடைந்தனர். அதில் 52 பேர் அடையாளம் காணப்பட்டனர். 7 பேரின் அடையாளம் அறியப்படவில்லை

இந்த திவிபத்துக்கு சதி வேலையே காரணம் என தகவல்கள் பரவவே குஜராத் மாநிலம் எங்கும் கடும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டனர். இந்த கலவரத்துக்கு காரணம் என அப்போதைய முதல்வர் மோடி மற்றும் மாநில அமைச்சர் அமித்ஷா மீது பலரும் குற்றம் சாட்டினர். இந்த கலவரம் குறித்து பதியப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்த கோத்ரா ரெயில் தீவிபத்து நடந்து 17 ஆண்டுகள் ஆகிய நிலையில் மரணமடைந்தோரின் வாரிசுகளுக்கு குஜராத் அரசு நிவாரண உதவித் தொகையை அறிவித்துள்ளது. இது குறித்து குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, “விஜய் ரூபானியின் தலைமையில் அமைந்துள்ள குஜராத் பாஜக அரசு கோத்ரா ரெயில் தீவிபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண நிதி உதவி அளிக்க தீர்மானித்துள்ளது.

இதை ஒட்டி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து விபத்தில் மரணம் அடைந்த 52 பேரின் வாரிசுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ.2.6 கோடி வழங்க உள்ளது. இது குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2017 ஆம் தேதி அரசுக்கும் ரெயில்வே துறைக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்னும் உத்தரவை ஒட்டி வழங்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.