அகமதாபாத்:
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் பத்ருதீன் ஷேக், சிகிச்சை பலனின்றி பலியானார். இநத் தகவலை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சக்திசிங் கோஹில் உறுதிப்படுத்தி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பத்ருதீன் ஷேக். சுமார் 40 ஆண்டுகாலம் இளைஞர் காங்கிரசில் தீவிரபணியாற்றி வந்தவர்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலத்தில் நலிந்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். இதன் காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு இறந்ததாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel