அகமதாபாத்,

ரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் பாஜக முதல்வர் விஜய் ரூபானி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி, முதன்முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான மேற்கு ராஜ்கோட் தொகுதியில் போட்டியிட்ட அவ்ர 46,159 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்ற வருகிறது. காலை முதலே பரபரப்பாக சென்ற வாக்கு எண்ணிக்கையின்போது, முதலில் பாஜக முதல்வர் வேட்பாளரான விஜய் ரூபானி பின்னணில் இருந்தார். பின்னர் நேரம் செல்லச் செல்ல அவர் முன்னிலை வகித்தார்.

இந்நிலையில், தற்போது வெற்றி பெற்றுள்ளார். அவர் 46,159 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.

இதன் காரணமாக அவர் மீண்டும் குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.