குஜராத்:
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விஜய் ரூபானி, குஜராத் முதல்வராகக் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி ஏற்றார். இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் விஜய் ரூபானி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல பாஜக சார்பிலும் விஜய் ரூபானி ராஜினாமா குறித்து எந்தவொரு விளக்கமும் வெளியிடப்படவில்லை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி பதவி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத், திரித் ராவத், கர்நாடாகவில் எடியூரப்பா, குஜராத்தில் விஜய் ரூபானி என ஒரே ஆண்டில் பாஜக முதலமைச்சர்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel