ஆமதாபாத்:

ண்ணீரை திருடினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா குஜராத்தில் பலத்த எதிர்ப்பையும் மீறி  நிறைவேற்றப்பட்டது.

குஜராத் மாநில சட்டமன்றத்தில், விவசாயத்திற்கு தண்ணீர் திருடப்படுவது குறித்து 2 மசோதாக் கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மசோதாக்களில் கூறியுள்ளபடி,  விவசாயத்திற்கான நீரைத் திருடினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் ஒன்றரை ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக் கப்படும் என்ற விதி மாற்றப்பட்டு, 2 லட்சம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை யும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,  கால்வாய்களிலிருந்து நீர் திருட்டுக்கு “தண்டனையையும் அபராதத்தையும் விதிக்கும் மசோதா விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு எதிரானது என்றும் இது ஒரு “கறுப்புச் சட்டம்” என்று குற்றம் சாட்டியது.

இந்த சட்டமசோதா  “பிரிட்டிஷாரை கூட வெட்கப்பட வைக்கும்” என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அதையடுத்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.