டில்லி

நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிகள் செய்ய குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மத்திய பொதுப்பணித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூரி அறிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் மத்திய அமைச்சரவை கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.  அந்த பணி மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்தது.  இந்த கட்டுமான பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகளை மத்திய பொதுப்பணித்துறை கடந்த மாதம் 2 ஆம் தேதி கோரியது.  சென்ற மாதம் 12 ஆம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பித்திருந்த 24 நிறுவனங்களுடன் துறை இயக்குனர் கலந்துக் கொண்ட சந்திப்ப்பு நிக்ழ்ந்தது.

தற்போது இந்த பணிகளுக்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள எச் சி பி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்தப் பனிகள் விரைவில் தொடங்கப்பட்டு மத்திய அமைச்சக அலுவலகங்க்ள் பணி 2021 ஆம் வருடம் நவம்பரில் முடியும் எனவும் பாராளுமன்ற பணிகள் 2022 ஆகஸ்டிலும் மத்திய அவை பணிகள் 2024 இல் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எச் சி பி அளித்துள்ள கட்டணத் தொகை மதிப்பீட்டை விட 40% குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதிப்பீட்டு தொகை ரூ.448 கோடி ஆகும்.  இந்த நிறுவனம் கடந்த 1960 ஆம் வருடம் ஹஸ்முக் சி படேல் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.    கடந்த 60 வருடங்களில் இந்நிறுவனம் கொல்கத்தா ஈடன் தோட்ட விளையாட்டரங்கம், ஐஐஎம் அகமதாபாத் மேம்பாலம்,  ஐதராபாத் ஆகாகான் அகாடமி ஆகிய பல பெரிய பணிகளை செய்துள்ளது.