காந்திநகர்:

குஜராத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பான்மை தொகுதிகளில் ஆம்ஆத்மி டெபாசிட் இழந்துள்ளது.

182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 30 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் 2 தொகுதிகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

இதர அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை கூட பெற முடியாமல் தோல்வியை தழுவியது. சில தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கையை கூட தாண்டவில்லை.