சென்னை: அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் துர்தர்ஷனில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வழிமுயையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு , புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் (AIR) இலவச ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ளது.
இதற்கென ஒரு புதிய ‘டிஜிட்டல் வவுச்சர்’ முறை பயன்படுத்தப்படவுள்ளது. இம்முறையின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு அடிப்படை அளவாக 45 நிமிடங்களும், அத்துடன் அவற்றின் முந்தைய தேர்தல் செயல்பாடுகளின் அடிப்படையில் கூடுதல் நேரமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்படி, சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் தகவல் தொழில்நுட்பத் தளம் வழியாக மின்னணு காலச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒளிபரப்பு, ஒலிபரப்பு காலமானது, ஒவ்வொரு கட்டத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து, அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை திட்டமிடப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கட்சிக்கும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகிய இரண்டிலும் தலா 45 நிமிடங்கள் அடிப்படை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்திற்குள்ளான மண்டல நெட்வொர்க்கில் சீராக வழங்கப்படும்.
அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முந்தைய சட்டப் பேரவை தேர்தல்களில் கட்சிகளின் தேர்தல் செயல்பாட்டின் அடிப்படையில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி ஒளிபரப்புகளுடன் கூடுதலாக, பிரசார் பாரதி கார்ப்பரேஷன் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் இரண்டு குழு விவாதங்கள் மற்றும் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யும்.
தகுதியுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பிரதிநிதியை பரிந்துரைக்கலாம், இது அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பாளரால் வழிநடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 39A-இன் கீழ், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களின் போது, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் (AIR) தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குவது குறித்த வழிகாட்டுதல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் நடைபெறவுள்ள மேற்கண்ட 5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கான ‘டிஜிட்டல் நேர வவுச்சர்கள்’ (Digital Time Vouchers) தகவல் தொழில்நுட்பத் தளம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் தேதிக்கும், வாக்குப்பதிவு நடைபெறும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முந்தைய தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த ஒலிபரப்பு/ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த ஒலிபரப்பு/ஒளிபரப்புக்கான துல்லியமான நேரம், மாநில/யூனியன் பிரதேச அளவில், அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த மாநில/யூனியன் பிரதேசத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில், குலுக்கல் முறையில் முன்கூட்டியே தீர்மானிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகிய இரண்டிலும் தலா 45 நிமிடங்கள் அடிப்படை நேரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இந்த இலவச ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு வசதி, அந்தந்த மாநிலத்திற்குள் உள்ள பிராந்திய அலைவரிசைகள் வாயிலாக அனைத்துக் கட்சிகளுக்கும் சமமாக வழங்கப்படும்.
அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், அவற்றுக்குக் கூடுதல் நேரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் தங்கள் ஒலிபரப்புக்கான உரைகள் (Transcripts) மற்றும் ஒலிப்பதிவுகளை, தொடர்புடைய வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றி, முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஒலிப்பதிவுகளை, பிரசார் பாரதி நிறுவனம் நிர்ணயித்துள்ள தொழில்நுட்பத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் ஒலிப்பதிவுக் கூடங்களிலோ அல்லது தூர்தர்ஷன்/அகில இந்திய வானொலி நிலையங்களிலோ பதிவு செய்துகொள்ளலாம்.
அரசியல் கட்சிகளின் நேரடி ஒலிபரப்புகளைத் தவிர, பிரசார் பாரதி நிறுவனம் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் இரண்டு குழு விவாதங்கள் மற்றும்/அல்லது பட்டிமன்றங்களை ஏற்பாடு செய்யும். இத்தகு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார்; இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தகுதிபெற்ற ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்கலாம்.
[youtube-feed feed=1]