சென்னை:
குட்கா,பான் மாசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா பொருள்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு தடையை நீட்டித்துள்ளது. ஆண்டுதோறும் நீட்டிக்கப்படும் இந்த தடை சம்பிரதாயத்துக்காக மட்டுமே நீட்டிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைசெய்து கடந்த 2013ம் ஆண்டு மே மாதம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வால் தடை உத்தரவு போடப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் பான்மசாலா விற்பனை மற்றும் உற்பத்திக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் குட்கோ, பான் மசாபா போன்ற போதை பொருட்கள் அனைத்து கடைகளிலும் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. காவல்துறையினர் குட்பா, பான் மசாலா விற்பனை செய்யும் கடைகளில் வாரம்தோறும் வந்து மாமூல் வசூல் செய்து வருவது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், குட்கா பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சம்பிரதாயத்துக்காக மட்டுமே நீட்டிக்கப்படும் இந்த தடையால் யாரும் நன்மை என்று சமுக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.