டெல்லி:
ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவைரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படும் என்று பொருளாதார விவகாரத் துறை செயலாளர் ச க்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்துவது என்பது பெரிய விஷயமாக உள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் இது அமலுக்குவருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்காக இணைந்து பணியாற்றி வருகிறது’’ என்றார்.
இவரது இந்த தகவல் மூலம் ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டது என்பதை உறுதிபடுத்துகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரிய வரி விதிப்பு திட்டமான ஜிஎஸ்டி மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. வரி பகிர்வு நிர்வாகம், கடல் வர்த்தகத்துக்கு அதிக வரி, வருவாய் இழப்புக்கு நிவாரணம் போன்ற பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தீர்வு காணப்பட வேண்டி இருந்தது.
வரும் செப்டம்பர் மாதம் வரை இது அமலாகாது என்ற நிலை இருந்து வந்தது. வருவாய் இழப்பு தொடர்பாக பல கட்ட பே ச்சுவார்த்தைகள் நடந்தது. புதிய வரி விதிப்பு மூலம் இழப்பு ஏற்பட்டால் அதற்கு நிவாரணம் வழங்கும் புதிய சட்டத்திற்கு ஜிஎஸ்டி குழு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
ஜிஎஸ்டி என்பது தற்போது நடைமுறையில் உள்ள பல விதமான வரிவிதிப்புகளை இணைந்து ஒரே மறைமுக வரிவிதிப்பாக கெ £ண்டு வருவது தான் ஜிஎஸ்டி,யில் சாராம்சம். 101வது அரசியல் அமைப்பு சட்டமாக கடந்த ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. உற்பத்தி, விற்பனை, சரக்கு நுகர்தல், சேவை போன்று நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரி விதிப்பு முறைக்கு மாற்றாக இது கொண்டு வரப்படுகிறது. இது அமல்படுத்தப்பட்டால் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் 17 விதமான வரிவிதிப்புகளுக்கு மாற்றாக இருக்கும்.