புதுடெல்லி:
ர்க்கரை அப்பளம் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்தப்பட வாய்ப்புக்காக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கேஸ் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது சர்க்கரை அப்பளம் சாக்லெட் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 26 வீதமாக உயர்த்தலாம் என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேற்கண்ட பொருட்களுக்கு தற்போது 18 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி இருந்து வரும் நிலையில் 10 சதவீதம் உயர்த்த மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கண்ட பொருட்கள் உள்பட 143 பொருள்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடதக்கது.