கொல்கத்தா:

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பக்கோடா வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

பக்கோடா விற்பனை செய்வதும் வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘பணமதிப்பிழப் என்ற பெயரில் மக்களின் சேமிப்புகளை பிரதமர் மோடி அழித்தார். பின்னர் சிறு பொருட்களுக்கு கூட வரி விதித்தார். தற்போது ம க்களை பக்கோடா விற்கவும், சாப்பிடும்படியும் கூறியுள்ளார்.

ஆனால் மக்கள் இதை எப்படி செய்வார்கள்?. பக்கோடா வியாபாரிக்கும் அதை தயாரித்து விற்பனை செய்ய அதற்கான திறன் வேண்டும். அனைத்து தொழில் வாய்ப்புகளும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்துக்கள் எ ந்தவிதமான மத வன்முறைகளிலும் ஈடுபட வேண்டாம். பாஜக கூறுவதை காது கொடுத்து கேட்டு யார் வீட்டையும் தாக்க வேண்டாம்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘பாஜக ஒரு அரசியல் கட்சி. அது 1984ம் ஆண்டு தான் பிறந்தது. அவர்கள் எப்படி இந்து பாரம்பரியம் குறித்து பாடம் நடத்தலாம்?. இந்து மதம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. உங்களுக்குள் மோதலை உருவாக்கிவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள்.

மக்கள் இறப்பது குறித்து அவர்கள் கவலை அடைவார்கள் என்று நினைக்கிறீர்களா?. எங்களது அரசு யாரு க்கும் தலை வணங்காது. எதையும் ஏற்றுக் கொள்ளும் கோழைத்தனமான அரசு கிடையாது’’ என்றார்.