கோவை அன்னபூர்ணா உணவகம் இன்று வெளியிட்டுள்ள கிரீம் பன் விளம்பரம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

சாதா பன்னுக்கு ஜீரோ டாக்ஸ், கிரீம் பன்னுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவது குறித்து கடந்த இரண்டு நாட்களாக அதிகளவு விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபல உணவகத்தின் இந்த ‘ஜிஎஸ்டி’ பன் விளம்பரம் அதை மேலும் அதிகரித்துள்ளது.

உணவகங்களின் தரநிலைக்கு ஏற்ப வரி வசூலிக்கப்படுவது என்பது ஒருபுறம் இருக்க அந்த உணவகங்களில் வாங்கி சாப்பிடும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி மாறுபாடு இருப்பது உணவக உரிமையாளர்களை மட்டுமன்றி அங்கு சென்று சாப்பிடும் வாடிக்கையாளர்களையும் பாதிக்கிறது.

இதனால் ஓட்டல் உரிமையாளர்களுக்கும் விவரம் தெரிந்த வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி வாய்க்கா தகராறாக மாறி ஜாதி மதம் பாலினம் என விதவிதமாக மிரட்டல் விடும் அளவுக்கு சென்று விடுகிறது.

https://x.com/Annapoorna_Cbe/status/1834591423233974464

பொதுமக்களையும் வியாபரிகளையும் பாதிக்கும் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஒரே சீராக மாற்ற பல்வேறு நிலைகளில் வெவ்வேறு காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

ஒரே கடலை மாவில் செய்த இனிப்பு பூந்திக்கு 5 சதவீதமும் காரா பூந்திக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓயாத இந்த ஜிஎஸ்டி பிரச்சனையின் அடுத்த கட்டமாக இந்த கிரீம் பன் விளம்பரம் வெளியாகி உள்ளதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த உணவக உரிமையாளரை அவமதிப்பதா ? ராகுல் காந்தி கண்டனம்