டில்லி
நேற்று நடந்த ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் கட்டுமானங்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படுகிறது
கட்டுமானங்களுக்கு ஜி எஸ் டி குறைக்க வேண்டும் என வெகு நாட்களாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நிலையில் ஜிஎஸ்டி மிகவும் அதிகமாக உள்ளதால் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது எனவும் அதனால் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அதை ஒட்டி இதற்கு முந்தைய ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜிஎஸ்டியை குறைக்க முடிவு செய்யப்ப்ட்டது.
நேற்று நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் கட்டுமான தொழில்களுக்கு ஜிஎஸ்டியை இருவிதமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி உள்ளிட்டு ஜிஎஸ்டி திரும்ப பெறும் போது 5% சதவிகிதமாகவும் திரும்ப பெறாதபோது 12% ஆகவும் மாற்றி அமைக்கபட்டுள்ளது. கட்டுமானப் பணியில் உள்ள கட்டிடங்களுக்கு 1% உள் ஜிஎஸ்டி இல்லாமல் குறைக்கப்பட்டுள்ள்து.
கட்டிட உரிமையாளர்கள் அல்லது கட்டிடம் அமைப்போர் இது குறித்து வரும் 31 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே உள் ஜிஎஸ்டி திரும்ப பெற்றவர்கள் நிலை குறித்து இதில் கூறப்படவிலை என கட்டுமான நிறுவனர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூறி உள்ளது.