திருமலை,

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கும் விடுதிகளின் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண யர்வு  1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 12% ஜிஎஸ்டியும், 2,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் கொண்ட விடுதிகளுக்கு 18% ஜிஎஸ்டியும் சேர்த்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது திருப்பதி கோவிலில் இனிமேல் செலுத்த வேண்டிய விடுதி அறைகளுக்கான கட்டண விவரம்

1,500 ரூபாய்  கட்டண அறை இனி 1,700 ரூபாய்

2000 ரூபாய் கட்டண அறை இனி 2,200 ரூபாய்

2,500 ரூபாய் கட்டண அறை இனி 3,000 ரூபாய்

3000 ரூபாய் கட்டண அறை  இனி 3,500 ரூபாய்

3,500 ரூபாய் கட்டண அறை இனி 4,100 ரூபாய்

4,000 ரூபாய் கட்டண அறை இனி 4,700 ரூபாய்

4,500 ரூபாய் கட்டண அறை இனி 5,300 ரூபாய்

6000 ரூபாய் கட்டண அறை இனி 7,100 ரூபாய்

இதேபோன்று திருப்பதி கோயில் மண்டபத்தில் திருமணம் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 10ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் இனிமேல்  18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு  உள்ளது.