டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
42-வது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். இன்றைய கூட்டத்தில், தமிழகம் உள்பட பாஜக ஆட்சி செய்யத மாநிலங்கள், ஜிஎஸ்டி இழப்பீட்டு விவகாரம் குறித்து பிரச்சினை ஏற்படுத்து வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தும் மாநிலங்களில் ஏற்படும் வருவாய் இழப்பை ஐந்தாண்டுகளுக்கு ஈடு செய்வதாக மத்திய அரசு சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2019-20 இல் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.1.65 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியது. இது, 2018-19 நிதியாண்டில் ரூ.69,725 கோடியாகவும், 2017-18 நிதியாண்டில் ரூ.41,146 கோடியாகவும் இருந்தன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒட்டுமொத்த இழப்பீடாக வழங்க வேண்டிய ரு.1.51 லட்சம் கோடி இன்னும் நிலுவையில் உள்ளது.
ஆனாரோல் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொருளாதாரம் கடுமையாக சரிவடைந்துள்ளதால், “ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடுசெய்ய உருவாக்கப்பட்ட நிதியில் போதிய பணம் இல்லை என்பதால் – வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம்” என்ற மத்திய அரசின் சமீபத்தில் அறிவித்து. இதுதொடர்பாக இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளனது
ஜிஎஸ்டி சட்டத்தின்படி, “ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும்” என்று மாநிலங்களுக்கு ஏற்கனவே மத்தியஅரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது, அந்த உத்தரவாதத்தை மீறி மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது. இது மாநில அரசுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வரும் நிலுவையைத் தொகை உடனே வழங்க வேண்டும் என மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில், இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கேரளா உள்பட பல மாநிலங்கள் மத்தியஅரசின் நடவடிக்கையை எதிர்த்து போர்க்கொடி தூக்கி உள்ளது, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் உள்பட மேற்கு வங்கம் கேரளம் போன்ற மாநிலங்களும் கடும் எதிா்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்றைய கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.