டில்லி:
கடந்த பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1லட்சம் கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.97 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி உள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் ரூ.97,247 கோடி வசூலாகி உள்ளதாக தெரிவித்துஉள்ளது.
Patrikai.com official YouTube Channel