புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வரிவருவாய், இரண்டாவது மாதமாக சரிந்து, ரூ.85,174 கோடிகள் மட்டுமே வசூலாகியுள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுதொடரபாக நிதியமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது; பிப்ரவரி மாத கணக்கின்படி, இதுவரை 69% வரிசெலுத்துனர்கள் மட்டுமே தங்களின் வரியை செலுத்தியுள்ளார்கள்.
ஜி.எஸ்.டி. வகையின்கீழ், கடந்த 2018 பிப்ரவரி மாதத்திற்கான (மார்ச் 26 வரை செலுத்தப்பட்டது) வருவாயாக, ரூ.85,174 கோடி பெறப்பட்டது.
அதேசமயம், ஜனவரி மாத வருவாயாக, ரூ.86,318 கோடியும், டிசம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் முறையே ரூ.88,929 கோடியும், ரூ.83,716 கோடியும் வசூலாகியுள்ளன.
மொத்தம் ரூ.25,564 கோடிகள், ஐ.ஜி.எஸ்.டி கணக்கிலிருந்து, சிஜிஎஸ்டி/எஸ்.ஜி.எஸ்.டி. கணக்குகளுக்கு திருப்பி விடப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி