டெல்லி: ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சமாக டிசம்பரில் ரூ. 1,15,174 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு 2016ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்தது.

ஆனாலும், தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டதன் விளைவாக ஆகஸ்டில்  ரூ. 86,449 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியது. தற்போது டிசம்பர் மாதத்திற்கு ரூ. 1,15,174 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி வரி வசூலாகியதே உச்சமாக இருந்த நிலையில், தற்போது அதை விட 12 சதவிகிதம் கூடுதலாக வசூலாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.