சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை? என்ற பட்டியல் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார.
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்பது வரும் 22-ம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைய இருக்கின்றன. இதையொட்டி தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 புத்தகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் வெளியிட்டார்.

சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில் வா்த்தகம் மற்றும் தொழில்கள் அமைப்புகள் அடங்கிய கூட்டுக் கூட்டம் சென்னையில் செப்டம்பர் 14ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசியவர், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு நாட்டில் (வாட், கலால் வரி உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரிகள்) சுமாா் 65 லட்சம் போ் வரி செலுத்தினா். ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக உயா்ந்தது.
ஆனால், சிலா் இதைக் கடுமையான வரி என்று வா்ணித்தனா். கடுமையான வரியென்றால் வரி செலுத்தியவா்கள் எண்ணிக்கை எப்படி உயா்ந்திருக்க முடியும்? இப்போது வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறை கூறியவா்கள் இப்போது ஏன் வாயை திறப்பதில்லை?.
ஜிஎஸ்டியில் இருந்து வந்த நான்கு அடுக்கு வரி விகிதம் இப்போது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்கு விகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 18 சதவீதமாக இருந்த 90 சதவீத பொருள்களுக்கு 5 சதவீத வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மொத்தம் 350 பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
, ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய டிராக்டருக்கு ரூ.42 ஆயிரம் வரை சேமிக்க முடியும். டிராக்டர் டயர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டர் டயர்களின் விலையில் ரூ.6,500 குறைந்துள்ளது.
காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி துணிகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சாவூர் பொம்மைகள், காஞ்சிபுரம் கைவினை பைகள், பவானி ஜமக்காளம், சுவாமிமலை வெண்கல சின்னங்கள், மணப்பாறை முறுக்கு, தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றுக்கும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கலாம்.

தமிழக பள்ளிகளில் பயின்று வரும் 1.5 கோடி குழந்தைகள் பயனடையும் வகையில் குறிப்பேடுகள், ரப்பர், பென்சில், கிரெயான்ஸ் போன்றவற்றில் ரூ.850 வரை பெற்றோரால் இனி சேமிக்க முடியும். அதேபோல் ரூ.1,000 மதிப்பிலான மருந்துகளுக்கு ரூ.100 வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புற்றுநோய்களுக்கான மருந்துகளுக்கு ரூ.1200 வரை விலை குறைகிறது. கட்டுமானத் தொழில்களில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சிமென்ட் கொள்முதலில் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்கலாம்.
ரூ.1 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையும், ரூ.6 லட்சம் மதிப்பிலான சிறிய ரக கார்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோக்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு இது நேரடியாக பயனளிக்கும். குறிப்பாக ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சி பெட்டிகளுக்கு ரூ.4 ஆயிரம் வரையும், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான ஏசி-களுக்கு ரூ.3,500 வரையும் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹீட்டருக்கு ரூ.7 ஆயிரம் வரையிலும் விலை குறையும். இ
இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, இந்திய தொழிலக கூட்டமைப்பு தமிழக தலைவா் உன்னிகிருஷ்ணன், ஜவுளித் தொழில் சங்கங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிரதிநிதி ஏ.சக்திவேல், ஹிந்துஸ்தான் சேம்பா் வி.சந்திரகுமாா், தமிழக வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் விக்கிரமராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.