ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை விரட்ட சத்தமாக இசைக்கப்படும் இசையால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் மீண்டும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விவசாயிகளை துன்புறுத்த ஆரம்பித்துள்ளன.
மேற்கு ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் என்ற மாவட்டத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் பருத்தி பயிர்களை சரி செய்யவே முடியாத அளவிற்கு நாசம் செய்துள்ளன.
ஸ்ரீகங்கா நகரில் உள்ள விவசாயி ஒருவர் இந்த வெட்டுக்கிளிகளால் என்னுடைய பயிர் 50% நாசமாகி விட்டன, மேலும் நாங்கள் அந்த வெட்டுக்கிளிகளை பயமுறுத்த பாத்திரங்களை சத்தமாக தட்டியும் டிராக்டர்களை ஓட்டியும் பார்த்துவிட்டோம், நான் மட்டுமல்ல, இதனால் ராஜஸ்தானில் உள்ள பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருட காலமாக இந்த வெட்டுக்கிளிகளின் வேட்டை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. எங்கள் பயிர்களும் நாசமாகி கொண்டு தான் உள்ளது, என்று விவசாயி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஜெய்சல்மார், பிக்கானர், பர்மர், ஸ்ரீகங்காநகர், ஜோத்பூர், ஜலொர், ஃபலொடி போன்ற மாவட்டங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன. ஏறத்தாழ ராஜஸ்தானில் உள்ள 12 மாவட்டங்கள் இந்த வெட்டுக்கிளிகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பருத்தி பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்து கொண்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட ஆயிரம் மைல்களை கடந்து சவுதி அரேபியாவிலிருந்து வந்து பாகிஸ்தானை அடைந்த இந்த வெட்டுக்கிளிகள் தற்போது பாலைவன மாநிலத்தை சேதப்படுத்தி கொண்டிருக்கின்றன. ஏற்கனவே கொரோனாவால் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில் வெட்டுக்கிளிகள் இவ்வாறு செய்வது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு அபசகுனமாகவே
தோன்றுகிறது.
இந்த வருடத்தின் துவக்கத்திலேயே வேளாண் துறை அமைச்சகம் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ரசாயனங்களை தெளிப்பது போன்ற வேலைகளைச் செய்தனர், ஆனால் இது எதுவும் வெட்டுக்கிளிகளிடம் எடுபடவில்லை. ராஜஸ்தானை சுற்றி அதிக அளவிலான பயிர்களை வெட்டுகிளிகள் நாசம் செய்தது தான் மிச்சம்.
ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் சத்தமாக இசைகளை வைத்தும், பாத்திரங்களை சத்தமாக அடித்தும், விறகுகளை எரித்தும், டிராக்டர்களை ஓட்டியும் இந்த வெட்டுக்கிளிகளை பயமுறுத்த போராடி வருகின்றனர. இது ஏதோ விவசாயிகளுக்கு சிறிதளவு உதவியதாக இருப்பதாக தெரிகின்றது.
இந்த வருடத்தின் துவக்கத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் நரேந்திர மோடியிடம் வெட்டுக்கிளிகள் பெரும்பாலான பயிர்களை நாசம் செய்வதை பற்றி கூறியிருந்தார், ஆனால் போதுமான அளவிற்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. ராஜஸ்தான் விவசாயிகளின் நிலைமையைப் போக்க மத்திய அரசும், மாநில அரசும் என்ன செய்யப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.