அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில், கோப்பையை கைப்பற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஜர் ஃபெடரரை, கிரிகோர் டிமிட்ரோ விரட்டியடித்தார். இதன் காரணமாக ரோஜர் பெடரர் ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 24ம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்தனிஸ்லாஸ் வாவ் ரிங்கா ஆகியோர் விளையாடினர்.
முதல் இரண்டு செட்களிலும் ஆறுக்கு நான்கு, ஏழுக்கு ஐந்து என்கிற கணக்கில் ஸ்தனிஸ்லாஸ் முன்னிலை பெற்றார். இந்நிலையில் மூன்றாம் செட்டில் காயமடைந்த நோவக் ஜோகோவிச் ஆட்டத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டென்னிஸ் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 38வயது வீரர் ரோஜர் ஃபெடரரும், தரவரிசையில் 78-வது இடத்தில் உள்ள பல்கேரியாவைச் சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவுக்கும் இடையே போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் ரோஜர் ஃபெடரர் வெற்றிபெறுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆட்டம் கடுமையாக இருந்தது. பெடரருக்கு டிமிட்டோவ் கடுமையான நெருக்கடிகளை கொடுத்தார். டிமிட்ரோவின் பந்துகளை சமாளிக்க முடியாமல் பெடரர் தடுமாறியது அவரது ரசிகர்களிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
காலிறுதிப் போட்டியில் பெடரர் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, 46-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியில் நுழையும் வாய்ப்பையும் இழந்து வெளியேறினார்.