டெல்லி: இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமுக ஆர்வலர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டிவிட் பதிவிட்டிருந்தார். இது வைரலானது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

[youtube-feed feed=1]