வாகன ஓட்டிகளை குளிர்விக்க சாலை நடுவே சிக்னல்களில் கிரீன் ஷேட் நெட் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் டிராபிக் சிக்னலில் நிற்கும்போது, வாகன ஓட்டிகள் லேசாக இளைப்பாற வசதியாக தற்காலிக பச்சை நிற வலைகள் கொண்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து கோடை வெயிலை சமாளிக்க கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மேட்டுப்பாளையம், ஊட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளுக்கு மக்கள் வழக்கமாக செல்வதுண்டு.

குளிச்சியான மாவட்டமாகவும் பசுமை நகரமாகவும் விளங்கி வரும் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கமான கோடை காலத்தை விட பல மடங்கு வெளியில் அதிகரித்துள்ளது.

இதனால் கோவை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களை குளிர்விக்கும் விதமாக கோவை மாநகர காவல் துறையுடன் இனைந்து மாநகராட்சி நிர்வாகம் இந்த பச்சை நிற மேற்கூரைகளை அமைத்துள்ளனர்.

ஏற்கனவே புதுச்சேரி, திருச்சி, திருப்பூர் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக மேற்கூரைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதை அடுத்து கோவையிலும் தற்போது டிராபிக் சிக்னலில் இதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.