புதுடெல்லி:
பாஜக எம்பியும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவருமான வருண்காந்தி தனது கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு, தேசத்துக்காக செய்த அரிய பெரிய தியாகங்களை இளைஞர்கள் மத்தியில் நினைவுகூர்ந்தார்
அப்போது அவர் பேசியதாவது:
ஜவர்கர்லால் நேரு என்றாலே அவர் ஒரு இளவரசைரைப்போல பகட்டாக வாழ்ந்தவர் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அவர் நாட்டுக்காக பதினைந்தரை ஆண்டுகாலம் கொடுஞ்சிறையில் வாடினார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஒரு பதினைந்தரை ஆண்டுகாலம் சிறையில் இரு. பிறகு உன்னை இந்த நாட்டுக்கு பிரதமர் ஆக்குகிறேன் என்று யாராவது சொன்னால் நான் நிச்சயமாக ஒத்துக் கொள்ளமாட்டேன். ஆனால் ஜவர்கர்லால் நேரு தனது இளம் வயதில் இந்த தேசத்துக்காக் தனது உடலில் காயங்களைச் சுமந்தார். அப்படிப்பட்டவர்கள் பாடுபட்டுப் பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் வீணாக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.”
வருண்காந்தி மேலும் பேசுகையில். இந்த நாட்டில் அரசியலில் பிரகாசிக்கும் 82% பேர் தங்கள் குடும்பப் பிண்ணனியாக அரசியலைக் கொண்டவர்கள். என் பெயருக்குப் பின்னால் “காந்தி” என்ற பெயர் மட்டும் இல்லாதிருந்தால் நானும் உங்களைப்போல பார்வையாளார்களில் ஒருவனாக இருந்திருப்பேன் என்று குறிப்பிட்டார்.