டில்லி,

ழியர்களின் பணிக்கொடைக்கான பணத்தில் ரூ.20 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த சட்டதிருத்தம் வர இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் கூறி உள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றி வரும்  ஊழியர்களின் பணிக்கொடைக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்ரேயா கூறியதாவது,

பணியாளர்களின் கிராஜு‘ட்டிக்கு வரி விலக்கு அளிப்பது குறித்து சட்ட திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய கேபினட் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்றும், அதைத் தொடர்ந்து வர இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் என்று கூறினர்ர்.

இதன் காரணமாக ஊழியர்களின் பணிக்கொடைக்கு குறைந்தது 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை வரி விலக்கு அளிக்க வகை செய்யப்படும் என்றார்.

தற்போது 5 வருடத்திற்கு மேல் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே கிராஜுட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு நிறுவனத்தில் 10 பேருக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றினால் மட்டுமே அந்த நிறுவனம் பணிக்கொடை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்தும் பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.