உலக செஸ் சாம்பியன் குகேஷ் தனக்கு ஊக்கமளித்த தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனை தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொம்மராஜூ வீழ்த்தினார்.

இந்த வெற்றியை அடுத்து மிக இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாற்றில் இடம்பிடித்தார் 18 வயதான குகேஷ்.

குகேஷின் இந்த சாதனை வெற்றியை பாராட்டும் விதமாக தமிழக அரசு அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூர் சென்று போட்டியில் கலந்து கொள்ள ஊக்கமளித்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் குகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் உங்கள் அனைத்து ஆதரவுக்கு நன்றி உதயநிதி ஸ்டாலின் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.