காஞ்சிபுரம்:

ற்சவர் சிலையை 40 ஆண்டுகள் பாதுகாத்த எங்களுக்கு  அத்திவரதரை தரிசிக்கவும், ஒரு நாள் உற்சவமூர்த்தி பூஜையில் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு உடையார்பாளையம் ஜமீன்தார் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடையார்பாளையம் ஜமின் குடும்பத்தினர்

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கக் கோரி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஜமீன்தார் வம்சாவழியினர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உற்சவர் சிலையை 40 ஆண்டுகள் பாதுகாத்த எங்களுக்கு, அத்திவரதரை தரிசிக்கவும், ஒரு நாள் உற்சவ மூர்த்தி பூஜையில் கலந்துகொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய உடையார்பாளையம்  ஜமீன்தார் வம்சாவழியைச் சேர்ந்த ராஜ்குமார் பழனியப்பன்,  16-ம் நூற்றாண்டில் முகலாய படை யெடுப்பின்போது அவர்களிடம் போரிட்டு காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயில் ஆகிய கோயில்களின் உற்சவர் சிலைகள் மீட்கப் பட்டு உடையார் பாளையத்தில் உள்ள எங்கள் ஜமீன்தார் அரண் மனையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தன.

போர் முடிந்த பிறகு கோயில் உற்சவர் சிலைகள் அனைத்தும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று உரிய கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை தெரிவித்தவர்,  எங்கள் குடும்பத்தினருக்கு அத்திவரதரை தரிசிக்க ஒருநாள் சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.