சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்  ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாகர் தெரிவித்துள்ளார்.

20224 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  2024ம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது.  தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. இதற்கிடையில், மக்களவை தேர்தல் அறிவிப்பு காரணமாக, அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கூட்டத்தொடர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஜூன் 20 ஆம் தேதி  சட்டப்பேரவை கூட்டம் தொடர் மானிய கோரிக்கை விவாதத்துக்கா கூட்டி உள்ளதாகவும், எத்தனை நாள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அலுவல்ஆய்வு குழு கூடி முடிவு செய்யும் என்று கூறியிருந்தார். அதன்படி, இன்று அலுவல் ஆய்வு குழு கூட்டம், சபாநாயகர் அறையில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு,  ஜூன் 20 முதல் ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரானது  காலை 10 மணிக்கு தொடங்குவதற்கு பதில், அரை மணி நேரம் முன்னதாக, காலை 9.30 மணிக்கே சட்டப்பேரவை கூடும் என அப்பாவு அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் போது, ஜூன் 21, 22, 24-0 தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது பேரவையில் விவாதம் நடைபெறும் என்றும் கூறினார்.