விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் நம்பர் ஒன் என்பது நமக்குத் தெரியும். சமையில் கலையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார் தெரியுமா?
நார்வே நாட்டில் நடந்து முடிந்த செஸ் போட்டியை தொடர்ந்து சதுரங்கத்தில் உலகில் தலைசிறந்த 10 வீரர்களுக்கிடையே சமையல் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஒரு அணிக்கு இரண்டு பேர் வீதம் 5அணிகள் பங்கேற்றன. டிங் லிரன் மற்றும் ஆனந்த் ஒரு அணியாகவும், உலக சாம்பியனான கார்ல்சன் மற்றும் வெஸ்லி ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.
காய்கறிகள், மீன் மற்றும் சாஸ் பயன்படுத்தி சமையல் செய்ய போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனந்த் மற்றும் டிங் லிரன் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைத்து முதலிடத்தையும் கார்ல்சன் மற்றும் வெஸ்லி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
நடுவர்கள் முன்னிலையில் நடத்த இந்த சமையல் போட்டியில் ஆனந்த் வெற்றிப்பெற்றார். சமைக்கும் போது தீ, கத்தி மற்றும் மீன் ஆகியவற்றை பார்த்த உடன் போட்டியில் வெற்றிப்பெற போவதிலை என ஆனந்த் எண்ணியதாக போட்டி முடிந்த நிலையில் கூறினார். தான் சமைத்த உணவை எனது மனைவி அருணா ருசிபார்த்தது மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன் என ஆனந்த் தெரிவித்தார்.