துரை

ந்து முன்னனி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு இப்போது விமரிசையாக தொடங்கி உள்ளது.

தற்போது இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் துவக்கமாக கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது.  இந்த மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டை ஒட்டி சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க வாகனங்களில் வருகை தந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் இடையூன்றி செல்வதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த்தொட்டிகள், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், உடனடி சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள்ம்இரண்டு கட்ட பாதுகாப்பிற்கு பின் மாநாட்டு திடலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.