புனிதர் பட்டம் பெற்ற
motherteresa
அன்னை தெரசா அவர்களின் புனித ஆத்மாவை போற்றி வணங்குவோம்..
அன்னை தெரேசாவின் புனித வரிகள்…

இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்.
அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.
குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
 நீங்கள் பிறரின் தவறை மன்னித்தால்; கடவுள் உங்கள் தவறை மன்னிப்பார்.
வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.
அன்புதான் உன் பலவீனம் என்றால்; நீயே மிகப்பெரிய பலசாலி.
மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.
தண்டனைத் தர தாமதி; மன்னிக்க மறு சிந்தனை வேண்டாம்.
உனக்கு உதவியோரை மறக்காதே. நீ பிறருக்கு உதவவும் மறக்காதே.
உன்னை நேசிப்பவரை வெறுக்காதே. உன்னை வெறுப்பவரையும் நேசி.
உன்னை நம்பியவரை ஏமாற்றாதே. உன்னை நம்பாதவரையும் ஏமாற்றதே.
புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார்.
நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.
பிறர்  நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல.
பிறர் தவறுகளுக்கு தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது.
உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிட மேலானவை
எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.
குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.
புன்னகையே அன்பின் ஆரம்பம்.
ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
 உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.
 நீ வாழ, பிறரை அழிப்பதே… உன்னிமுள்ள மிகப் பெரிய வறுமை.
 வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
 உன் வெற்றி அல்ல, உதவும் உள்ளமே கடவுளுக்குத் தேவை.
அன்னையின் புனித வரிகளை கடைபிடிப்போம்… நம் வாழ்வும் புனிதமாக….