‘காதல் எஃப்எம்’, ‘குச்சி ஐஸ்’ இயக்குநர் விஜய் பிரகாஷ் தற்போது ‘உலகம்மை’ என்ற ஒரு புதிய படத்தை இயக்குகிறார். எஸ்விஎம் புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.மகேஷ்வரன் தயாரிக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்படும் ‘உலகம்மை’ படத்திற்கு கே.வி.மணி ஒளிப்பதிவு செய்ய, குபேந்திரம் வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தில் கௌரி கிஷன் நாயகியாக நடிக்கவுள்ளார். அவருடன் வெற்றி மித்ரன், மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.