சென்னை
தமிழக அரசு திருவண்ணாமலை கோவில் நிலத்தில் புதிய தர்கா ஏதும் அமைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் மலை தர்கா விவகாரம் கடும் புயலை கிளப்பியுள்ளது. இதுவரிஅ அந்த விவகாரம் பற்றிய அனல் அடங்காத நிலை உள்ளது. தற்போது புதிய சரச்சை ஒன்று கிளம்பி உள்ளது.
அதாவது
”’திருவண்ணாமலை கோவிலுக்கு சொந்தமான கிரிவலப்பாதையில் புதிதாக தர்கா முளைத்துள்ளது. இப்போது தர்கா… அடுத்து வக்பு சொத்து… அடுத்து அந்த மலையே தர்காவுக்கு சொந்தம் என்று சொல்வார்கள்…’
எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் அளித்துள்ள விளக்கத்தில்
“இது முற்றிலும் பொய்யான தகவல். தர்கா அமைந்துள்ள இடமானது கோவிலுக்கு தொடர்புடையது அல்ல. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தர்கா உள்ளது திருவண்ணாமலை நகர நில அளவை பதிவேட்டின்படி தெரியவருகிறது.
நகர கணக்கெடுப்பு பதிவேட்டில் குறிப்பு காலத்தில் மசூதி கட்டிடம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே சமூக வலைத்தளங்களில் கோவில் இடம் குறித்து பரவி வரும் தகவலானது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என்று அருணாசலேசுவரர் கோவில் செயல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார் “
என்று அறிவிக்கப்பட்டுள்ளது,