கிறிஸ்தவ தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துவிட்டு இனி இரண்டு ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை. ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றுத்தரும் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அமல்படுத்தவுள்ளது. இதன்மூலம் 150 ஆண்டு கால பழமையான சட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

divorce

இந்து மற்றும் பார்சி தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு சட்டப்படி ஒரு ஆண்டு காத்திருந்தால் போதும். ஆனால் 1869-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டமோ கிறிஸ்தவ தம்பதிகள் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறது. எனவே இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இரண்டாண்டுகால காத்திருப்பை மற்ற மதத்தினருக்கு உள்ளது போல ஒரு ஆண்டாக குறைக்கும்படி கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததையடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.