டில்லி:

இந்திய உணவு கழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு முடிவு செய்யும் என்று குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் உணவு கொள்முதல் மற்றும் விநியோகத்தை மேற்கொள்ளும் அரசு சார்ந்த நிறுவனமான ஃஎப்சிஐ நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பத்திரம் வெளியீடு மூலம் மேலும் ரூ. 12 ஆயிரம் கோடி திரட்ட நாடாளுமன்ற குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் பொது விநியோகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் திவாகர் ரெட்டி தலைமையில் ஃஎப்சிஐ முதலீட்டை மறுசீரமைப்பு செய்யும் திட்டம் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலீட்டை ரூ. 50 ஆயிரம் கோடியுடன் நிலைநிறுத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் ரூ. 45 ஆயிரம் கோடி கடன் மூலமும், பங்கு முதலீடு மூலம் ரூ. 5 ஆயிரம் கோடியை திரட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த 5 ஆயிரம் கோடி ரூபாயை 2 ஆண்டுகளில் முதலீடு வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே ஃஎப்சிஐ வசம் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பத்திரங்கள் உள்ளது. அரசு பங்கு பத்திரம் மூலம் இதை மேலும் ரூ.32 ஆயிரம் கோடி உயர்த்த வேண்டும் என்று அந்த குழு குறிப்பிட்டிருந்தது. நாடாளுமன்ற சிறப்பு சட்டம் மூலம் ஃஎப்சிஐ உருவாக்கப்பட்டது.

நிறுவன சட்டங்கள் இதற்கு பொருந்தாது. இதன் முதலீடு என்பது சமபங்கு முதலீடாக இருக்கும். பங்குகளாக பிரிக்கப்படமாட்டாது. அரசு துறைகளில் நிலுவையில் உள்ள மானிய தொகைகளை வசூல் செய்ய ஃஎப்சிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு தெரிவித்துள்ளது.

கிராம மேம்பாட்டு அமைச்சகம் ரூ. 2,452 கோடியும், மனித வள மேம்பாட்டு துறை ரூ. 248 கோடியும், வெளியுறவு துறை அமைச்சகம் ரூ. 48 கோடியும் நிலுவை வைத்துள்ளது. ஃஎப்சிஐ உணவு தானிய கொள்முதல், இருப்பு வைத்தல், நகர்த்துதல், போக்குவரத்து, விநியோகம், உணவு தானிய விற்பனை ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

அரசு அறிவிக்கும் விலையில் உணவு தானியங்களை கொள்முதல் செய்து மாநில பொது விநியோக திட்டங்களுக்கு மானிய விலையில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.