டில்லி

ந்தியா நிதி பற்றாக்குறை காரணமாக மேலும் ரூ. 50000 கோடி கடன் வாங்க உள்ளது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம் முன்னேறும் என அறிவிக்கப் பட்டது.    அதைத் தொடர்ந்து இந்த வருடம் அமுலாக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வரி விகிதங்கள் மாற்றப்பட்டு  வரி செலுத்துவோர் பலன் அடைவார்கள் என அறிவிக்கப்பட்டது.    ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி அளித்த ஆண்டு அறிக்கையின் மூலம் அனைத்து ரூபாய் நோட்டுகளும் வந்து விட்டதாக தெரிய வந்தது.    அத்துடன் ஜிஎஸ்டி யில் இன்னமும் மாறுதல்கள் செய்ய்யப்பட்டு வருவதால் மக்களிடையே ஒரு தெளிவின்மை உண்டாகி உள்ளது.

இந்நிலையில் நிதி அமைச்சகம் அதிகப்படியாக ரூ.50000 கோடி கடன் வாங்கப் போவதாக அறிவித்துள்ளது.     வரவுக்கும் செலவினங்களுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள இடைவெளியை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.    ஆனால் பொருளாதார அறிஞர்கள் அரசு மேலும் கடன் வாங்க நேரிடும் என கூறி உள்ளனர்.   இதன் மூலம் அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாமல் பொருளாதார பின்னடைவு உண்டாகி உள்ளது தெளிவாகி உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

”கடந்த 2014ஆம் வருடம் மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில் கச்சா எண்ணை விலையை பாரலுக்கு $55 என்னும் கணக்குப் படி பொருளாதரம் குறித்த தங்கள் ஊகங்களை வங்கிகள் அமைத்திருந்தன.   ஆனால் தற்போது கச்சா எண்ணெய் பாரலுக்கு $67 ஆக உயர்ந்துள்ளது,  வங்கிகளின் கணக்கை முழுவதுமாக மாற்றி உள்ளது.     இந்த வருடம் எரிபொருள் பட்ஜெக் மட்டும் 15% வரை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.    இது அரசால் கட்டுப் படுத்த முடியாத ஒன்றாகும்.

அதே போல ஜிஎஸ்டி யின் கணக்கும் தப்பாக போய் உள்ளது.   முதலிலேயே இது குறித்த தெளிவான ஒரு அறிவிப்பின்றி ஆரம்பிக்கப்பட்டது.    அதனால் அடிக்கடி வரி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டி வந்தது.    இந்த மாறுதல்களினால் எதிர்பார்த்த அளவு வரி வருமானம் வரவில்லை.    இது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கம் ஆகியவைக்குப் பிறகும் என்பதை விட இந்த இரு நடவடிக்கைகளால் தான் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மேலும் ரூ. 50000 கோடி கடன் வாங்கும் நிலையில் இந்தியா உள்ளது.”  என பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.