புதுடெல்லி: சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து அரசின் அனுமதியின்றி, எந்தவித மின்சார உபகரணங்களையும் இறக்குமதி செய்யக்கூடாது என்று கூறியுள்ளார் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங்.
அவர் கூறியுள்ளதாவது, “இன்றைய நிலையில், நமது நாட்டிற்குத் தேவையான மின்சார உபகரணங்கள் அனைத்தையும் நாம் தயாரிக்கிறோம். நம்மிடம் அத்தகைய உற்பத்தி வசதிகளும், திறன்களும் உள்ளன.
கடந்த 2018-19 ஆண்டு காலக்கட்டத்தில், ரூ.71000 கோடி மதிப்பிற்கு நாம் மின்சார உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளோம். அவற்றில், ரூ.21000 கோடி அளவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், மேம்படுத்துனர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோருடன் நான் சந்திப்பை நடத்தினேன். அப்போது, நமது நாட்டிற்கு பதிலாக, நமது வீரர்களைக் கொன்று, நமது மண்ணை ஆக்ரமிக்கும் நாட்டில் நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளோம் என்றேன்.
எனவே, சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து மின்சாரப் பொருட்களை இனிமேல் இறக்குமதி செய்ய வேண்டுமெனில், மத்திய அரசின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும்” என்றுள்ளார் அமைச்சர்.