டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இந்திய தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் கூறுகின்றன.

கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவுடன் கை கோத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்க இந்தியாவில்  வல்லுநர்கள் குழு ஆலோசனை நடத்தியதாகவும், தற்போது இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்றும் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.