அகமதாபாத்:
குஜராத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்து உள்ளார்.

உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் தனது கைவரிசையை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தற்போது 171 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 4 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும், 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த 2 பேரும், வதோதரா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே ஸ்பெயினுக்கு பயணம் செய்து வந்துள்ளார். அதுபோல மற்ற 2 பேரும், ஏற்கனவே பின்லாந்து & நியூயார்க்கிற்கு பயணம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை முதன்செயலாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.
[youtube-feed feed=1]