டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும்  மீண்டும் முழு அடைப்பு போட வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2 அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 185,248 பேருக்கு கொரோனா,1,026 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று அதிகரிப்பு காரணமாக மஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸுடனான ஒரு காணொளி சந்திப்பில் உரையாடிய நிதி அமைச்சர் நிர்மலா  சீத்தாராமன், இந்தியாவின் வளர்ச்சிக்கான நிதி கிடைப்பதை கடன் வழங்கும் இடத்தை அதிகரிக்க சர்வதேச நிதி நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளை சீதாராமன் பாராட்டினார். தொடர்ந்து பேசும்போது,  கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து இருந்தாலும்,  இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். நாட்டின், பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க அரசாங்கத்துக்கு விருப்பமில்லை.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் வீடுகளை தனிமைப்படுத்துதல் போன்றவைகளின் மூலம் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்படும், கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது போல் முழு ஊரடங்கு இருக்காது என்று தெளிவுபடுத்தினார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டது.

 

 

இதனால் .