டெல்லி,

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் சம்பளம் இருமடங்காக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் உள்ள நீதிபதிகளில் அதிகபட்சமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தற்போது, இதர சலுகைகள் அதாவது தனி கார், வீடு, உதவியாளர்கள் போன்ற மற்ற சலுகைகள் இல்லாமல் ரூ.1 லட்சம், மாத சம்பளம் வாங்குகிறார்.

புதிய சம்பள உயர்வின்படி, அவரது மாத சம்பளம் இனி  சலுகைகள்  தவிர்த்து ரூ.2.80 லட்சமாக உயரும்..

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம் ரூ.3 லட்சம் மற்றும் சலுகைகள் உடன் நிர்ணயிக்க வேண்டும் என, இதுதொடர்பான நீதிமன்றக் குழு பரிந்துரை செய்தது.  மத்திய அரசு ரூ.2.80 லட்சம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் சம்பள உயர்வு பரிந்துரை செய்த நீதிபதிகள் குழு இதை ஏற்றுக்கொள்ளாமல் மனக்கசப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல் மாநில அளவிலான உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாத வருமானம் ரூ.2.25 லட்சமாக உயரும் எனவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பளத் தொகை, மத்திய அமைச்சக செயலர்கள் பெறும் மாத சம்பளத்தைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.